முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தொடர்பான புகாரில் சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த பொற்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர் சாப்பாட்டு ராமன் என்கிற யூடியூப் சேனலை நடத்தும் பொற்செழியன். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் சின்னசேலம் பகுதியை அடுத்த கூகையூர் பகுதியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்பன் என்ற பெயரில் சித்தா கிளினிக் நடத்தி வந்தார்.
இவர்கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்களை யூடியூப் சேனலில் வழங்கியிருந்தார். அது பொதுவான டிப்ஸ் ஆகத்தான் இருந்தது என்றாலும் சித்தா மருத்துவரான இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.
வீடியோவில் 9 : 30 நிமிடத்தில் பார்க்கவும்
இதையடுத்து போலீசார் இவரது சிகிச்சை மையத்திற்கு விசாரணைக்காக சென்ற போது, அங்கே இவர் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது தெரிய வந்தது. மேலும், இவரது சிகிச்சை மையத்தில் ஆங்கில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சித்தா மருத்துவ படிப்பை முடித்த இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது சட்டப்படி குற்றம் என்பதால், இவரை போலீசார் போலி மருத்துவம் பார்த்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த தகவல் இவரது யூடியூப் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News