முழு ஊரடங்கு அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை அமிஞ்சிக்கரை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தகவும் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசி மருந்துகளை 90 விழுக்காடு மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் மத்திய அரசு ரு. 150க்கும் மாநில அரசுகளுக்கு 2 முதல் 5 விழுக்காடு மக்களுக்கு இந்த தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மேலும் 2000 மருத்துவர்கள் செவிலியர்கள் துணை மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012 இல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்திற்கு ஏற்கனவே 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் 58.5 கோடி டோஸ் தடுப்பு ஊசி மருந்தை தயாரிக்கும் திறன் பெற்ற இந்த ஆலையில் உற்பத்தி தொடங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும், கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்களை நியமிக்க வேண்டும், மாநிலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top