இன்றைய ராசிபலன் 28-05-2021

மேஷம்:

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

ரிஷபம்:  

சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும்.  சிலர் உங்களிடம் நயமாகப் பேசினால் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.

மிதுனம்:

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உடன் பிறந்தோர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 7.

கடகம்:

உறவினர்கள், நண்பர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரியுடன் நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

சிம்மம்:

 நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:  2, 5.

கன்னி:

 எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு  நல்ல வரன் அமையும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பணம்  பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

துலாம்:

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

விருச்சிகம்:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, களைப்பு, கோபம் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவியால் தேங்கி கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1,3, 9.

தனுசு:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கி கொண்டிருக்காதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்:2, 5.

மகரம்:

உறவினர்கள், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:2, 6, 9.

கும்பம்:

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எந்த பிரச்சினையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில்  எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7.

மீனம்:

உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறை வேறும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 7.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top