புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமிநாராயணனை நியமித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் யாரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனிடையே புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூன்று பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி மாநில 15வது சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக முதலமைச்சரின் பரிந்துரையின் பெயரில் ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணனை துணைநிலை ஆளுநர் நியமித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







