இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை நீக்கியது பாகிஸ்தான்

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது. அதனால் பருத்தி விலை கடுமையாக உயர்ந்தது.

பருத்தியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. இதற்கு முன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த  இந்திய மருந்துகள் மற்றும் மூலப் பொருட்கள் மீதான இறக்குமதிக்கு விதித்த தடையை பாகிஸ்தான் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜெர்மனியும், பிரான்ஸும்  மோதிக்கொண்டாலும் வர்த்தக ரீதியாக நல்ல உறவில் உள்ளது. அதுபோல இந்தியாவும், பாகிஸ்தான் திகழும் என தெரிவித்துள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course