கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் கொரோனாவால் 4,454 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 3 லட்சத்து 3,720 பேராக பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 2,315 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 11 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22,315 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 2 கோடியே 67 லட்சத்து 52,447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 27 லட்சத்து 20,716 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் தற்போது வரை 19 கோடியே 60 லட்சத்து 51,962 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







