தலைநகர் டெல்லியில் மயானங்களில் முழு நேரமும் உடல்கள் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், மயானம் ஒன்றில் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு பெரும் போராட்டமே நிகழ்ந்து வருவது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள சுபாஷ் நகர் பகுதியில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கும் இடம் இல்லாமல் வாகனம் நிறுத்தும் இடங்களில் கூட சில உடல்கள் வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







