சர்க்கரை நோய் கட்டுக்குள் வராமல் இருப்பது இந்த காரணங்களால் தான்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்ற கட்டாயம் தான். ஆனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதானது.

தீவிர நடைப் பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இருந்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். இதனையும் மீறி சிலருக்கு சர்க்கரையின் அளவை குறைக்க மிகுந்த சிரமப்படுவார்கள். அதற்கான உடல்ரீதியான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். 

 • ரத்தத்தில் கொழுப்பின் (LDL & TGL) அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. முதலில் கொழுப்பின் அளவை குறைக்க வேண்டும்.             
 • கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடு குறைவாக இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. கல்லீரல் வலுவடைய ஏதுவாக உணவை உண்ணவேண்டும். சிலருக்கு மாத்திரைகளின் பக்கவிளைவால் கல்லீரல் பாதிப்பு அடையும்.
 • சிறுநீரில் அல்புமின் என்னும் புரதம் கசிவாக வெளியேறினால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
 • சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.  ஆகவே சர்க்கரை நோயாளிகள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • தொடர்ந்து சளி இருமல் என நோய்த்தொற்று இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
 • குடலில் அமில சுரப்பு  என செரிமானத்தை பாதிக்கும் பிரச்சினைகள் அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
 • தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.  தூக்கம் பாதிக்கும் போது உடலின் மெட்டபாலிசத்தை தாமதமாக்கும் ஆகவே சர்க்கரை அளவு இரத்தத்தில் அதிக அளவில் இருக்கும்.
 •  மன உளைச்சல் மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. உடலை இயக்குவது மனம் தான்.
 • தைராய்டு பிரச்சனை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
 • சிறுநீரகம் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் சிறுநீரக பாதிப்பு உள்ளது.
 • உடல் உழைப்பு இல்லை என்றாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
 • கணையத்தின் செயல்திறனில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
 • சிறுநீரகத்தின் செயல்பாடு சரியாக இல்லையென்றாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.

சர்க்கரை நோய் ஒரு உயிர்க்கொல்லி என்பதால் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women