சின்னத்திரை சீரியல்களிலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பல வடிவங்களில் பணியாற்றி வந்துள்ளார். யூடியூபில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களையும் செய்து வந்தார்.

நடிகர் சுபா வெங்கட்டிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.48 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

குறிப்பாக திரைத்துறையினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்தித்து வருவது திரை துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நகைச்சுவை நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, நிதிஷ் ராணா, பாடலாசிரியர் அருண் காம ராஜாவின் மனைவி, பாடகர் கோமகன், கில்லி பட புகழ் நடிகர் மாறன், நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா, சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என அடுத்தடுத்து நடிகர்கள் கொரோனாவால் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி உள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







