11 வருடங்களுக்குப் பிறகு லால்பாக் படத்தில் மம்தா மோகன்தாஸ்!

லால்பாக் படத்தை பிரசாந்த் முரளி இயக்க, மம்தா மோகன்தாஸ், ராகுல் மாதவ், சிஜோய் வர்க்கீஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். 2010-ல் தெலுங்கில் நடித்த மம்தா மோகன்தாஸ், 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். 2005-ல் மயூகம் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் மம்தா மோகன்தாஸ்.

2006-ல் கரு.பழனியப்பனின் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் நடித்தார். 2007-ல் யமதொங்கா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தமிழில் குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர், கடைசி ஒன்பது வருடங்களில் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.

இதனிடையில் இருமுறை கேன்சர் பாதிப்புக்குள்ளான மம்தா இருமுறையும் தைரியமாகப் போராடி தற்போது கேன்சரிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார். கேன்சருக்கு முன்பும், பின்பும் அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் அளித்து ஆதரவாக இருந்தவர்களில் நடிகர் திலீப் முக்கியமானவர். சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு தமிழில் விஷாலின் எனிமி படத்தில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ்.

தெலுங்கில் இவர் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் கேடி, நாகார்ஜுன் நடித்த இத்திரைப்படம் 2010-ல் வெளியானது. 11வருடங்கள் தெலுங்கு படத்தில் நடிக்காமல் இருந்த மம்தா இந்த வருடம் லால்பாக் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகிறது.

லால்பாக் படத்தை பிரசாந்த் முரளி இயக்க, மம்தா மோகன்தாஸ், ராகுல் மாதவ், சிஜோய் வர்க்கீஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கேன்சர் பாதித்தவர்கள் பயப்பட தேவையில்லை. மருந்தும், மன தைரியமும் இருந்தால் கேன்சரிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பதற்கு மம்தா ஒரு வாழும் உதாரணம்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com