ஒரு மைல் தூரத்தை பத்து நிமிடத்தில் ஓடினால் எரியும் கலோரியும், பத்து நிமிடம் தொடர்ந்து இந்த பயிற்சி செய்யும் போது எரியும் கலோரியும் சமமாக இருக்கும். இதனால், உடல் எடை வேகமாகக் குறைவதாகும். உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதற்கு ஆயிரம் காரணங்களைச் கூறலாம்.
கொரோனா பயம், உடற்பயிற்சி நிலையம் பாதுகாப்பு இல்லை, சாலையில் வாக்கிங் செல்ல முடியாது, சின்னதாக இருக்கும் மொட்டை மாடியில் வாக்கிங் செல்வது கஷ்டம், டிரெட் மில் எல்லாம் வாங்க முடியாது என்று “உடற்பயிற்சி” செய்யாதிருப்பவர்கள் காரணங்களை சொல்லிக் கொண்டே செல்வார்கள். நம் உடலை ஒரு கயிறு இருந்தால் போதும் அதை வைத்து ஃபிட்டாக்கலாம் என்கின்றனர் உடற்பயிற்சி ஆராய்ச்சியாளர்கள்.
வீட்டில் இருக்கும் போது ஸ்கிப்பிங் விளையாடுவது தசைகளை வலுவாக்கும் பின்பு உடலுக்கு ஸ்டாமினாவை தரும் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சி ஸ்கிப்பிங்.
ஸ்கிப்பிங் பயிற்சி:
ஒரு நிமிடம் ஸ்கிப்பிங் விளையாடினாலும் அது பத்து கலோரியை எரிக்கும். மேலும், கால், பின் சதை, தோள்பட்டை, வயிறு, கைகளை உறுதியாக்கும். பத்து நிமிடம் தொடர்ந்து பயிற்சி செய்தால் குறைந்தபட்சம் 200 கலோரி வரை எரிக்க முடியும். பத்து நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடினால் எரியும் கலோரியும், பத்து நிமிடம் தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்யும் போது எரியும் கலோரியும் சமமாக இருக்கும். இதனால், உடல் எடை வேகமாக குறைகிறது.
நன்மைகள்:
ஸ்கிப்பிங் விளையாடுவது உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலுக்குமே பயிற்சியாக அளிப்பதாகும். கைகளை சுழற்றி, குதிக்கும் போது கை, கால், இடுப்பு, வயிறு என எல்லா உறுப்புகளும் பலம் பெறுகின்றன.
இதயத்துக்கான சிறந்த கார்டியோ பயிற்சியாக ஸ்கிப்பிங் இருக்கிறது. இது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதயம் துடிப்பது அதிவேகமாக இருப்பதால் இதயத்தசைகள், ரத்த நாளங்களை பலம் பெறச் செய்கின்றன. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
உடலின் நிலைத் தன்மையை ஸ்கிப்பிங் செய்வதால் அதிகரிக்கச் செய்கிறது. கையை சுழற்றி கயிற்றை சுழற்றும் போது நமது கால்கள் குதிக்க வேண்டும். எனவே மூளை மற்றும் உடலின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். குதித்து நிலையாக நிற்க வேண்டும். இப்படி ஒன்றுக்கு ஒன்று சேர்ந்து செயல்படும் போது உடலின் பேலன்ஸ் தன்மை அதிகரிக்கிறது. எலும்புகளை வலுப்பெறச் செய்ய ஸ்கிப்பிங் பயிற்சி உதவியாக இருக்கிறது. பின்பு எலும்பின் அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்து ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
இதயம் அதிவேகமாக துடிப்பதால் உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு போய் சேர்க்கிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது. இதன் காரணமாக சருமத்தில் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுவதால் சருமம் பொலிவு பெறுகிறது. நீங்கள் குதித்து பயிற்சி செய்யும்போது நுரையீரலுக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தன் முழு கொள்ளளவுடன் நுரையீரல் இயங்க தூண்டுகிறது. இதன் காரணமாக நுரையீரலின் செயல்திறன் மேம்படுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







