உடலுறவு கோவிட் 19 காலத்தில் கொள்வது சரியா?

திருமணமான  தம்பதிகள் இந்த கோவிட் 19 காலத்தில் உடலுறுவை  பாதுகாப்பாக மேற்கொள்வது மிகவும் அவசியம். பாதுகாப்பான உடலுறவு உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும். எனவே எந்த மாதிரியான உடலுறவை  இருவரும் ஈடுபட வேண்டும் என அறிந்து கொள்வோம்.

 உலக அளவில் மக்களிடையே கோவிட் 19  பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் எல்லோரும் கவனமாக இருப்பது அவசியம்.கோவிட் 19 பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாப்பதற்காக  சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் இரண்டும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதற்கிடையில் திருமணமான  தம்பதிகள் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடலாம். அப்படி ஈடுபட்டால் தொற்று நோய் பரவாமல் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கும். உங்க துணைக்கு ஒரு வேளை கோவிட் 19 தொற்று இருந்தால் அவருடனான உடல் நெருக்கம் உங்களுக்கும் ஆபத்தை வரவழைக்க வாய்ப்பு உள்ளது.

நிம்மதியான உறக்கம்

ஆரோக்கியமான பாலியல் செயல்பாடு இந்த கொரோனா காலகட்டத்தில் மிகவும் அவசியம். இதற்கிடையில் தற்போது பாலியல் செயல்பாட்டில்  சரிவு ஏற்பட்டுள்ளது என்று லீசர் சயின்சஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் தொற்று காலத்தில் உடலுறவு என்பது  உங்களுக்கு ஏற்படும் பதற்றம் மற்றும் பயத்தை குறைக்கிறது. இது உங்களுக்கு நிம்மதியை தருவதால்  பதட்டத்தை குறைத்து உங்க தூக்கத்தை ஊக்குவிக்கிறது. உங்க மூளை ஆனது எண்டோர்பின்கள் மற்றும் ஆக்ஸிடாஸின் ஆகியவற்றை வெளியிடுகிறது. இதனால் மகிழ்ச்சியானவராக  நீங்கள் இருக்க முடியும்.

​உடல் ரீதியான நெருக்கம்

எந்தவொரு விதமான உடல் தொடர்பும் அல்லது 10-20 விநாடிகளுக்குச் செல்லும் ஒரு சிறிய அரவணைப்பு அல்லது முத்தம் கூட நல்ல உணர்வு ரசாயனங்களை வெளியிடுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த கொரோனா  மன அழுத்த காலங்களில் உடல் ரீதியான நெருக்கம் நல்ல நிம்மதியான மன நிலையை தருகிறது.பாலியல் ரீதியான நெருக்கத்தை இந்த கொரோனா கால கட்டத்தில் எப்படி பாதுகாப்பாக மேற்கொள்ளலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

​உங்க துணையின் ஒப்புதல் அவசியம்

உங்க துணையின் அனுமதி இல்லாமல் அவர்களை உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவது தவறு. நீங்கள் உடலுறவில் ஆர்வமாக இருந்தால் கூட உங்க துணையின் அனுமதி மிகவும் அவசியம். ஏனெனில் இந்த கொரோனா  தொற்று காலத்தில் தொடுதல் மற்றும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் பயத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயமாகும். எனவே உடலுறவில்  நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பு உங்க துணையின்  அனுமதியையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

சோதனையை பற்றி கலந்துரையாடுங்கள்

நீங்கள் கோவிட் 19 -ன் சிறிய அறிகுறிகளைக் கண்டால் கூட கவனமாக இருங்கள். அறிகுறி தெரிந்தால் பரிசோதனையில் முடிந்த வரை ஈடுபடுங்கள். இதில் நேர்மையாக உங்க துணையுடன் இருங்கள். உங்க துணைக்கு  பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது குறித்து வெளிப்படையாக உங்க துணையுடன் கலந்துரையாடுங்கள். நெருங்கிய தொடர்பு, முத்தம், பாலியல் செயல்பாடு செய்வதற்கு முன்பு சோதித்து கொள்ளுங்கள்.

அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

நீங்கள் முடிந்த வரை வெளிப்படையாக இருப்பது அவசியம். வெளியில்  செல்லும் போது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளிகளை பராமரிப்பது போன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.இந்த விஷயங்களை துணைகளில் ஒருவர் பின்பற்றா விட்டாலும் ஆபத்து இரண்டு பேருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.உடலுறவில் முடிந்த வரை ஈடுபடும் போது ஆணுறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது கோவிட் 19 மற்றும் பிற பால்வினை நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

​செக்ஸ்டிங் செய்யலாம்

உங்க பார்ட்னரிடம் இருந்து விலகி இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம் . அந்த மாதிரியான சமயங்களில் தொழில்நுட்பத்தை மேற்கொள்வது நல்லது.உங்க பாலியல் உணர்வை செக்ஸ்டிங் வீடியோக்கள் போன்றவை வெளிக்காட்ட உதவி செய்யும். பல மக்கள் நெருங்கிய உறவைப் பேணுவதற்கான ஒரு சிறந்த வழியாக இது செயல்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. நீங்கள் தனிப்பட்ட படங்கள் அல்லது நிர்வாண புகைப்படங்களைப் உங்க துணைக்கு பகிரும் போது கவனமாக இருங்கள்.

​உங்க துணையை நன்கு அறிய முயற்சி செய்யுங்கள்

ஆன்லைனில் உங்க துணையுடன்  டேட்டிங்களை முயற்சி செய்து மகிழுங்கள். உணவுகளை ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளுங்கள். சமூக தூரத்தை கடைபிடியுங்கள். மேற்கண்ட பாலியல் டிப்ஸ்களை கடைபிடித்து உங்க பாலியல் விருப்பத்தை பாதுகாப்பாக செயல்படுத்துங்கள்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course