திருமணம் செய்வதற்கு முன்னாடி உங்க பார்ட்னர்கிட்ட இதபத்தி  தெளிவா பேசிக்கோங்க; இல்லனா பிரச்சினைதான்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் செய்வது என்பது  மிக முக்கியமான ஒரு பெரிய படியாகும். இது அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயக்கக்கூடிய  ஒரு விஷயம். திருமண உறவுகள்  கடமைகள், பொறுப்பு நிறைந்தது. இரு எதிர்பாலினங்கள் இணையும்போது  உறவில் பல சிக்கல்கள் பல மகிழ்ச்சிகள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் நிறைய முயற்சிகள், தியாகங்கள், மாற்றங்கள், சமரசங்கள் போன்ற பலவற்றை வாழ்க்கையில் உள்ளடக்குகிறது. 

திருமணம் என்பது  இரண்டு குடும்பங்கள் மட்டுமல்லாமல் இரண்டு குடும்பங்களின் ஒன்றியத்தையும் உள்ளடக்கியது. ஆகவே, ஒருவர் தனது  திருமண உறவில் ஈடுபடுவதற்குமுன்  அது குறித்து முற்றிலும் உறுதியாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பாக  ஒரு மென்மையான சுற்று  பயணத்தை உறுதிப்படுத்த உங்கள் துணைவியிடம்  நீங்கள் செய்ய உரையாட வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

பணம் 

திருமண தம்பதிகள் பணத்தைப் பற்றி பேசி முடிவெடுப்பது  நிதி பிரச்சனையை தடுக்கும் அதுமட்டுமில்லாமல் பணத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அதாவது  நீங்கள் செலவு செய்பவரா அல்லது சேமிப்பவரா என்றும் உங்களிடம் தனி அல்லது கூட்டுக் கணக்குகள் இரண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என  பணம் தொடர்பான விஷயங்களில் வெளிப்படைத்தன்மையை நிலை நிறுத்துவதற்கும், உங்கள் துணைவி எந்த வகையான பொறுப்புகளை எடுக்க வேண்டும் என்று பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்கும் இந்த விவாதம் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். 

 உடலுறவு 

எந்தவொரு காதல் உறவிலும் செக்ஸ் என்பது  ஒரு பங்காக அல்லது ஆரோக்கியத்தை குடுக்கக்கூடிய அங்கமாக உள்ளது. உங்கள் துணைவியிடம் திருமணம் செய்வதற்கு முன்பாக செக்ஸ் குறித்து கலந்துரையாடுங்கள். செக்ஸ் குறித்து உங்கள் கருத்து ? எத்தனை முறை நீங்கள் உடலுறவு கொள்ள விரும்புகிறீர்கள்? உங்கள் பாலியல் தேவைகளைப் பற்றி பேசும்போது உங்கள் துணைவி எப்படி உணருகிறார் என்று கேட்பதும் நல்லது. 

தனிப்பட்ட இடம் 

உங்கள் நேரத்திற்கான தனிப்பட்ட இட தேவையை  தனியாக அல்லது ஒருவருக்கொருவர் கண்டிப்பாக பேசி கொள்ள வேண்டும்.பெரும்பாலும்  மக்கள் இந்த தலைப்பை ஆரம்பத்தில் கவனிப்பதில்லை. ஆனால், ஆரம்ப கட்டத்தில் தீவிர பிணைப்புக்குப் பிறகு, இருவரும் தங்களுக்கு சிறிது நேரத்தை  ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றும். பின் அவர்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட நினைப்பார்கள். 

குழந்தைகள் 

ஒரு தம்பதியினர்க்குள் நேராகவோ  மற்றும் நேர்மையாகவோ  உரையாடலை நடத்துவது மிகவும் முக்கியமானதாகும்.அவர்கள் உண்மையில் குழந்தைகளைப் பெற விரும்புகிறார்களா என்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பெற்றோரின் வாழ்க்கை பயணம் குறித்த நம்பிக்கைகள், கடமைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். 

மதம் மற்றும் மதிப்புகள் 

 திருமணத்தில் சில தம்பதிகள் எதிர்பார்ப்பதை விட அவர்களது  மதமும், சடங்கும் மற்றும் ஒழுக்கமும் பெரிய பங்கு வகிக்கின்றன. நிறைய பேருக்கு, மற்றவர் அவர்கள் நினைப்பதை  விட மத சடங்குகள் மாறும்போது சண்டைகள் ஏற்படுகின்றனர். இதனால் உங்கள் விசுவாசத்தைப் பற்றிப் பேசுங்கள். அது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நீங்கள் காண்கிறீர்கள். 

நீங்கள் ஒருவருக்கொருவர் 

நீங்கள் ஒருவருக்கொருவர் என்ன மாற்ற விரும்புகிறீர்கள் தனது  துணையை  பற்றி ஏதாவது மாறும் என்ற ரகசிய நம்பிக்கையுடன் நிறைய கூட்டாளர்கள் திருமணத்திற்குள் நுழைகிறார்கள். அப்படி இருந்தாலும் இந்த அமைதியான நம்பிக்கையைப் பெறுவது  உங்கள் திருமணத்தின் நீண்டகால ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். எனவே, திருமணத்திற்கு முன் அவற்றை வெளிப்படுத்துவது உண்மையில் உங்களுக்கு மிகவும் பயனுள்ள வழியில் உதவும்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course