முடி உதிர்வது என்பது பெரும் பிரச்சினை என்றாலும் தீர்வு இல்லாத பிரச்சினை இல்லை.முடி உதிர்வதைத் தடுக்கவென்று விலையுயர்ந்த தைலங்கள் தேவையில்லை.நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்கள் போதும்.அதனைப்பற்றி பார்ப்போம்.

*தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் வெந்தயம் :
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.சைனஸ் உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்.
*தலைமுடி உதிராமல் இருக்க கருஞ்சீரகம் :
கருஞ்சீரகத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு மெல்லிய தீயில் அடுப்பில் வைக்கவும்.நிறம் மாறிய எண்ணெய் ஆறியதும் அதனை எடுத்து வைக்கவும்.
எலுமிச்சை சாறை எடுத்து அதனுடன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து தலையில் தேயுங்கள். வாரம் இருமுறை செய்தால் பொடுகு மறைந்துவிடும்.
*தலைமுடி உதிராமல் இருக்க சோம்பு :
சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது குறையும்.
*தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் பால், மிளகுபொடி மருத்துவம்:

பாலில் முடி வளரத் தேவையான புரதச்சத்து நிறைந்து உள்ளது. பாலுடன் மிளகுப் பொடியை கலந்து தலையின் வேர்க்கால்களில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.பொடுகு , பேன் தொல்லை நீங்கும்.
எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு உடனே கிடைக்காது. தொடர் முயற்சியால் தான் கிடைக்கும்.ஆதலால் தொடர்ந்த பராமரிப்பு முறைகளால் மட்டுமே கூந்தல் உதிர்வதைக் குறைக்க முடியும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







