ஆப்பிள் சாப்பிடுவதால் இப்படி ஒரு பயனா?

 

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரே பழம் ஆப்பிள் தான். ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழம் என்பதில் ஐயமில்லை. ஒரு ஆப்பிளில் கார்போஹைட்ரேட் 25 கிராம் அளவு உள்ளது. ஆகவே இதனை சர்க்கரை நோயாளிகள் உண்ணலாமா என்பது தான் பலருக்கும் தோன்றும் சந்தேகம்.

 

ஆப்பிளில் உள்ள சர்க்கரை வகை:

 

ஆப்பிளில் உள்ள சர்க்கரை வகையானது ப்ரக்டோஸ் வகையாகும். இந்த சர்க்கரையும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பது தான் பொதுவான நம்பிக்கை.ஆனால் இதில் ஆச்சரியம் தரும் விஷயம்.

 

என்னவென்றால் ஆப்பிளில் உள்ள  நார்ச்சத்து ஆனது ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட் சிதைந்து க்ளுக்கோஸ் ஆவதை குறைப்பதோடு மட்டும் அல்லாமல் இரத்தத்தில் சர்க்கரை கலப்பதைத் தாமதமாக்குகிறது . ஆகவே ப்ரக்டோஸ் வகை சர்க்கரை குறிப்பிடும் வகையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதில்லை. இதற்கு ஆப்பிளில் உள்ள ஃபாலிபீனால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கிய காரணம்.

 

ஆப்பிள் பழச்சாறு குடிக்கலாமா?

 

ஆப்பிளை பழச்சாறு , ஜாம் என அனைத்திலும் சக்கையாக நார்ச்சத்து வெளியேறுவதால் கண்டிப்பாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆகவே ஆப்பிளை அதன் தோலுடன் ஒரு நடுத்தர அளவு பழத்தை சர்க்கரை நோயாளிகள் உண்ணலாம்.

 

தினமும் ஆப்பிள் சாப்பிடலாமா?

 

தினசரி ஒரு ஆப்பிள் உண்பவர்களுக்கு டைப் 2 டயாபடீஸ் வருவதற்க்கான வாய்ப்பு 28% குறைகிறது.

 

டைப் -1 டயாபடீஸ் எனும் வகை சர்க்கரை நோயில் உடலுக்கு தேவையான அளவு இன்சுலினை கணையம் சுரக்காததால் உயரும் சர்க்கரை அளவு. இதற்கு தீர்வாக

ஆப்பிளின் தோலில் உள்ள ஃபாலிபீனால்கள் கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும் இதனால் சர்க்கரையின் அளவு குறையும்.

 

டைப் -2 டயாபடீஸ் : கணையம் சுரக்கும் இன்சுலினை உடலில் உள்ள செல்கள் ஒத்துழைப்பு தராததைத்தான் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் என்பர். ஆப்பிள் உண்ணும் போது அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸைக்குறைக்கிறது. 

 

அளவுடன் உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்வது தான் சிறப்பு.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com