அத்திக்காய் சாப்பிடுவீர்களா? உங்களுக்கு நல்ல சேதி இருக்கிறது!

அத்திப்பழம் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது நாம் அறிந்ததே. அத்திக்காயும் மருந்தாக பயன்படுகிறது என்பது புதிய தகவல். எப்படி எல்லாம் அத்திக்காய் சாப்பிடுவது என்று தெரிந்து கொள்வோம்.

 

அத்திக்காய் விதை உண்ணலாமா?

அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதிலுள்ள விதைப் பகுதியை ஒரு ஸ்பூன் வைத்து சுரண்டி எடுத்துவிட வேண்டும். அத்திக்காயின் நடுவில் பூச்சி மற்றும் புழு இருக்கலாம் அதை நன்கு கவனித்து சுத்தப்படுத்த வேண்டும். நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு நன்கு கழுவ வேண்டும்.சுத்தப்படுத்திய அத்திக்காயை உண்ணலாம்.

அத்திக்காய் கூட்டு

அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து வழக்கம் போல கூட்டு , குழம்பு செய்யலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றது.

அத்திக்காய் பலன்கள்:

அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். பெண்களுக்கு வெள்ளை படுவது குறையும். சீதபேதியை குணமாக்கும். வாயுத்தொல்லையை போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய் வயிற்று புண்னுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம்.

அத்திமரத்திற்க்கு ஈர்ப்பு சக்தி அதிகம்:

  • அத்திமரத்தில் பலகை செய்து அதன் மீது அமர்ந்து தியானம் செய்வதற்க்கு பயன்படுத்துகின்றார்கள். இந்த மரப்பலகைகள் தியானத்தின் சக்தியையும் மன ஒருமைப்பாட்டையும் நமக்கு அளிக்கவல்லது என்று கூறப்படுகிறது.
  • அத்திக்காய் குளிர்ச்சி தரும். அத்திப் பிஞ்சினால் மூலம், வாயு, மூலம், வயிற்றுப்புண், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்ற உணவு ஆகும்.
  • அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.இதன் சிறப்பே அதன் துவர்ப்பு சுவை தான்.
  • போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் வினிகரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
  • அத்திக்காயை ஊறுகாய் செய்து உண்பவர்களும் உண்டு. மலைக்கிராமங்களில் வசிப்பவர்களிடம் கேட்டால் கொண்டு வந்து தருவார்கள். கிடைக்கும் போதெல்லாம் இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course