*ஆமணக்கு எண்ணெய் தினமும் புருவத்தில் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
*தேங்காய்ப்பாலை கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.

* பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
*துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
*உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் பனி வெடிப்பு நீங்கும்
*பாதாம் பருப்பை பாலுடன் ஊற வைத்து அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
*சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்து ஊற விட்டு குளியுங்கள்.
*கொத்தமல்லிசாறு மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
*சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.
* முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.

*முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி தலை முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
*சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் நாளடைவில் குறையும்.
*வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து கரும்புள்ளிகள் மீது தடவி வைத்து நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
*தினமும் பசு வெண்ணெய்யுடன் கறிவேப்பிலைப் பொடியையும் ஒரு உருண்டை சோற்றுடன் சேர்த்துக் சாப்பிட்டு வந்தால் இளநரை குறையும்.
*தயிர், முட்டை, எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து சிறிதுநேரம் கழித்து குளிக்க பொடுகு குறையும்.
*திராட்சை சாற்றை தடவி மசாஜ் செய்ய கழுத்திலுள்ள கருமை குறைந்து, கழுத்து அழகு பெறும்.
*எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.
*கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்த கலவையை உதடு வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






