45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு

 

தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் கட்ட அலை அதிவேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் அரசினர் மற்றும் சுகாதாரத்துறையினர் பல கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி மக்கள் இதுவரை 10% பேர் மட்டுமே தடுப்பூசியை போட்டுகொண்டு உள்ளதாக கூறியுள்ளனர்.

 

கொரோனா நோயின் அச்சுறுத்தல் காரணமாக பலர் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில், சுகாதாரத் துறையினர் இந்த தடுப்பூசிகளை நேரடியாக சென்று போட்டு வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவின் படி அடுத்து வரும் 25 ஆம் தேதிக்குள் 45 வயது மேற்பட்டவர்கள் 100% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்ற இலக்கை எட்டிவிட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ். செல்வவிநாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் 45 வயது மேற்பட்டோர் உள்ள அனைவரும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் செயல்படுத்த மாவட்ட துணை சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான தடுப்பூசிகள் வை இருப்பில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

 

மேலும் மக்களிடையே நிலவி வரும் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர். அந்தந்த பகுதியை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்று உறுதி படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சுகாதாரத்துறையினர் அனைத்து இடங்களுக்கு வாகனங்களில் சென்று 100% தடுப்பூசி போட வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர். அதையடுத்து மக்களிடம் தடுப்பூசி பற்றிய அச்சத்தை போகும் வழியில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வு தீவிரமாக மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com