நிறைமாத கர்ப்பிணிகளே உங்களுக்கு தான் இந்த டெலிவரி பேக் (delivery bag) லிஸ்ட்!

 

“மழை வருவதும் , மழலை பிறப்பதும் மகேசனுக்கு தான் தெரியும்”, என பெரியவர்கள் அடிக்கடி கூறும்  சொல்லாடல்.என்னதான் நவீன மருத்துவம் கணக்கு போட்டு பிரசவ தேதியை குறித்தாலும் , குழந்தை பிறப்பு பெரும்பாலும் கணித்த நாளிலே (due date) பிறப்பதில்லை. ஆகவே ஜனனம் நம் கையில் இல்லை.

ஆகச்சிறந்த வரமாக பிள்ளைப்பேறை இறைவன் நமக்கு அளித்ததே பெரும் வரம்.அஜாக்கிரதையாலோ , அறியாமையாலோ குழந்தையை இழந்து விடக்கூடாது என்பதில் கர்ப்பிணியும் , அவரைச்சேர்ந்தவர்களும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டால் கடைசி நேர பரபரப்பின்றி , பொறுமையாக கடினச்சூழலை சமாளிக்கலாம்.

ஒன்பதாம் மாதத்திலே தயாராகுங்கள்!

முழுமையான கர்ப்பகாலம் என்பது 280 நாட்கள் ஆகும்.அதாவது 38 லிருந்து 40 வாரங்கள் என்றும் கணக்கு வைத்துக்கொள்ளலாம். 36 வது வாரத்தில் பிரசவத்திற்கு தயாராக மனதையும் , மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

டெலிவரி பேக் தயாரா?

முதலில் டெலிவரி பேக்கில் என்னென்ன தேவை என்று பார்ப்போம்.


* இதுவரை நீங்கள் பரிசோதனை செய்த முடிவுகளின் மருத்துவ ஆவணங்கள் ( medical reports,  and scan results.)

* அவசியமான தொலைப்பேசி எண்கள் எழுதிய சிறு டைரியும் , அதனுடன் அவசரத்தேவைக்கான பணமும் எடுத்து வைக்கவும்.

* இன்சூரன்ஸ் , மருத்துவமனை ஐடி

* நாப்கின்கள் அல்லது பழைய சுத்தமான காட்டன் துணிகள்.

* குழந்தைக்கு தேவையான சுத்தமான காட்டன் துணிகள்.

* தாய்க்கென்று தனியாக டவல் , ஒரு செட் நைட்டி போன்ற எளிதாக அணியும் ஆடை.

* குழந்தைக்கு டவல்

* போர்வை

* புத்தகங்கள்

வெளிநாட்டினர் குழந்தைக்கும் சேர்த்து எல்லாம் வாங்கி தயாராக வைத்து இருப்பார்கள்.நாம் கொஞ்சம் சென்டிமென்ட் பேர்வழிகள் ஆகவே மிக அவசியமானதை மட்டும் தயார் செய்து வைப்போம்.

பிரசவத்திற்க்கான அறிகுறிகள்

அம்மா , பாட்டி , மகப்பேறு மருத்துவர் என்னவிதமான அறிவுரைகள் கூறியிருந்தார்களோ அதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரசவத்திற்க்கான அறிகுறிகள் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கர்ப்பிணியின் சூழலும் , உடல்நிலையும் வேறு. பிரசவ வலிக்கான அறிகுறிகளை பார்ப்போம்.

* பனிக்குடம் உடைதல் , பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து அம்னியாடிக் திரவம் கொட்டுதல் . உடனடியாக  மருத்துவமனையை அணுகுங்கள்.

*கர்ப்பப்பை சுருங்கி விரியும் போது ஏற்படும் வலி. விட்டு விட்டு வலி வரும்.

* உதிரப் போக்கு

* உடல் நடுக்கம்

* சிலருக்கு வயிற்று போக்கு , வாந்தி ஏற்படும்

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course