புதிதாக திருமணமான பெண்கள், மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்கள், திடீரென உடல் எடை அதிகரிக்கும் பெண்கள் என எதோ ஒரு வகையில் இந்த தைராய்டு பெண்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக தற்போது உள்ளது. இதற்காக கண்டிப்பாக பெண்கள் அவர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் மகப்பேறு மருத்துவரை பார்க்கிறார்கள். அப்படி என்றால் முதலில் தைராய்டு என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்சிதை மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கும் வரை நமது உடலில் உடல் எடை, மாதவிலக்கு பிரச்சனை , உடல் எடை அதிகரிப்பு இது எதுவும் நமக்கு தெரியாது. ஆனால், எப்போது அந்த தூண்டிவிடப்படும் ஹார்மோனில் பிரச்சினை வருகிறதோ அப்போது தான் அப்போது தான் தைராய்டு ஹார்மோன் வேலை செய்யாமல் போகிறது. இது இரண்டு வகையாக வரலாம். ஒன்று தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரக்கும், மற்றும் ஒன்று தைராய்டு ஹார்மோன் இரண்டு தைராய்டு ஹோர்மோன் குறைவாக சுரக்கும் இதுதான்.
அறிகுறிகள்:
- சோர்வு
- உடல் எடை அதிகரிப்பு
- மாதவிலக்கு
- கருவுறுதலில் சிக்கல்
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:

இன்றைய வேகமான வாழ்க்கையில் ஃபாஸ்ட் புட் முக்கிய உணவாகிப் போய் விட்டது. ஃபாஸ்ட் புட் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், தைராய்டு உள்ளவர்கள் அவற்றை சிறிது எடுத்து கொண்டாலும் , அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் பாஸ்ட் ஃபுட்டில் அதிக அளவு உப்பு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது போதுமான அளவு அயோடின் சத்துக்கள் கொண்டதாக இருக்காது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணம் ஆவதுடன், அயோடின் அளவையும் குறைத்துவிடும்.பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







