வினிகர் கலந்த நீரில் பாதங்களை ஊற வைப்பதால் ஏற்படும் நன்மைகள்….

பொதுவாக நாம் நமது பாதங்களைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நமது காலணிகள் தேய்ந்து போகும் போது அல்லது கால் விரல்களுக்கு இடையில் அரிப்பு அல்லது வலி என்று ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் போது தான் நமது பாதங்களைக் கவனிக்கிறோம்.ஆகவே நீண்ட நாட்களாக நாம் நமது பாதங்களைப்பராமாிக்காமல் வந்திருந்தால், “தற்போது நாம் நம் பாதங்களை சற்று பராமாிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது வீட்டிலேயே தண்ணீரையும் வினிகரையும் கலந்து பாதங்களை நனைக்கலாம். எவ்வாறு இதைச் செய்வது என்பதைக் கீழே பாா்க்கலாம்.”

எக்ஸிமாவை குறைக்க எவ்வாறு வினிகர் உதவும் என்பதை கீழே பார்க்கலாம்

எக்ஸிமா என்பது  உள்ளங்கால்கள் மற்றும் விரல்களுக்கு இடையில் ஏற்படும் ஒருவகையான அலர்ஜி ஆகும். பொதுவாக நீச்சல் குளங்களில் அதிகம் குளோரின் கலப்பதால், நீந்துபவர்களின் பாதங்களில் எக்ஸிமா என்ற அலா்ஜி மிக எளிதாக ஏற்படும். அதே நேரத்தில் நீச்சல் குளங்களில் மட்டும் அல்ல, மாறாக மற்ற இடங்களில் இருந்தும் இந்த அலா்ஜி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. காலணி அணியாமல் வெறும் காலோடு நடந்தாலும் எக்ஸிமா என்ற அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு. 

எக்ஸிமா என்ற பூஞ்சை அலர்ஜியானது பாதங்களில் உள்ள தோலில் வறட்சி, அலர்ஜி, வீக்கம் மற்றும் கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். வினிகரில் பூஞ்சைகளுக்கு எதிரான தடுப்பாற்றல் உள்ளது. வினிகரில் இருக்கும் நிறைந்த மணமானது, பாதங்களில் இருக்கும் பூஞ்சைகளின் தொற்றை குணப்படுத்தும். ஆகவே தொடர்ந்து வினிகரைக் கொண்டு பாதங்களை நனைத்தால் நீந்துபவர்களின் கால்களில் ஏற்படும் எக்ஸிமா என்று அழைக்கப்படும் தோல் அலர்ஜியை மிக விரைவாக குணப்படுத்தலாம்.

பாதங்களில் இருக்கும் வியர்வை நாற்றத்தைப் போக்கும்..

நமது பாதங்களில் இருக்கும் வியர்வையிலிருந்து மற்றும் பாதங்கள் அல்லது ஷூ க்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்து வரும் நாற்றம் மிகவும் கொடுமையாக இருக்கும். வினிகரை பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவற்றிற்கு எதிராக பயன்படுத்தலாம். ஆகவே வினிகரில் நமது பாதங்களை நனைத்தால், பாதங்களில் இருக்கும் கெட்ட நாற்றம் மறைந்துவிடும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வினிகரில் பாதங்களை நனைத்து வந்தால், நமது ஷூக்களை கழற்றும் போது நாம் மூக்கை மூட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் வினிகாின் மணத்தை அனைவரும் விரும்புவர். அதனால் பாதங்களை அடிக்கடி வினிகரில் கழுவும் போது வினிகாின் மணம் வந்தாலும் எவரும் அதை வெறுக்க மாட்டார்கள். 

உலர்ந்த பாதங்களுக்கும், குதிகால் வெடிப்புகளுக்கும் ஊக்கம் தரும் மருந்து..

உலர்ந்த பாதங்களும் மற்றும் பாதங்களில் உள்ள வெடிப்புகளும் பாா்ப்பதற்கு அகோரமாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், அவை வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். வினிகரில் இருக்கும் அமிலத் தன்மை, நமது பாதங்களுக்கு ஒரு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. மேலும் பாதங்களை வினிகரில் நனைக்கும் போது நமது பாதங்கள் மென்மையைப் பெறுகிறது.

வினிகரை  பயன்படுத்துவது எப்படி

மேலும்,  வினிகர் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய  பொருளாகும். எனவே  பாதங்களை  வினிகரில் நனைப்பது என்பது எளிதான ஒன்று ஆகும். ஒரு சிறிய அளவிலான வாளி அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 பொிய டம்ளா் வினிகருக்கு 2 பொிய டம்ளா் வெந்நீர் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு நமது பாதங்கள் நனையும் அளவுக்கு வாளியை வினிகரும், வெந்நீரும் கலந்த கலவையால் நிரப்ப வேண்டும்.

அனைத்து  வகையான வினிகரையும் கால்களில் உள்ள பாதங்களுக்கு பயன்படுத்தலாம். இப்போது வினிகரும், வெந்நீரும் கலந்த கலவைக்குள் பாதங்களை அமிழ்த்த வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த கலவைக்குள் நமது பாதங்கள் இருக்க வேண்டும். பின் பாதங்களை வெளியே எடுத்து அவற்றை நன்றாக உலர வைக்க வேண்டும். ஒரு வேளை பாதங்களில் அலர்ஜி, அரிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்புகள் போன்றவை இருந்தால் அவை குணமாகும் வரை தினமும் பாதங்களை வினிகரில் நனைக்கலாம். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course