இந்த காலத்தில் உடல் எடையை குறைப்பது தான் பலருக்கு பெரும் சவாலாக இருக்கிறது, இயற்கையாக நம் உணவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை வைத்து நம் உடல் எடையை குறைக்கலாம் , அதை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் அந்த பொருள் தான் ‘வெந்தயம் ‘ , ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தில் ஆய்வில் வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் குறைக்கும் சக்தி இருப்பதை கண்டுபிடித்தனர் , வெந்தயம் எந்த அளவு ,எப்படி சாப்பிட வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்
வெந்தயம் என்பது பொதுவாக சமையல் ருசிக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இது எளிதாக மளிகை கடைகளில் கிடைத்து விடும். இதில் 50 % நார் சத்து உள்ளது, இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.

இது நம் உடம்பில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை பொறுத்து நாளைக்கு 25 கிராம் முதல் 50 கிராம் சாப்பிடலாம், ஆரம்பத்தில் 25கி இரண்டாக பிரித்து 12.5 கி காலை மற்றும் மாலை என எடுத்துக்கொள்ளலாம்.இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை பொடியாக்கி தண்ணீரில் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம்.

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும் வரை வெந்தயம் எடுத்துக் கொள்ளலாம், இதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் ரிசல்ட் காணலாம். இதன் மூலம் உடல் எடையை குறைப்பதோடு, இன்சுலின் ஹார்மோன் அதிகரிக்க செய்கிறது வெந்தயம்.பக்க விளைவு இல்லாத இம்முறையை பின்பற்றி சில நாட்கள் முயற்சி செய்தால் எவ்வளவு எடையையும் இருந்தாலும் ஈஸியா குறைக்கலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







