பிரசவித்த தாய்மார்களுக்கு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டும்

பிரசவத்திற்கு பின் தாயானவள் உடலில் பல மாறுதல்களை அதாவது உடல் ரீதியாக, மன ரீதியாகவும் அடைகிறாள்.  பலகீனமான நிலையில் தாய் தனது உடலை வலுவேற்றவும் , குழந்தைக்கு பால் தரவும் வேண்டும் என்பதால்  சத்துக்கள் நிறைந்த ஆகாரம் என்பது மிகவும் அவசியம். உடல் இயல்பு நிலைக்கு திரும்ப நல்ல உணவும் மனம் இயல்பாக குழந்தையை தாயும், அவளது உற்றார் உறவினர்களும் கனிவுடன் கவனிப்பது போல், தாயையும் நல்ல ஓய்வெடுக்க செய்து, ஊட்டச்சத்து உணவுகளை அளித்து பாதுகாத்திட வேண்டும். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் தாய்மார்கள் உண்டு. வெகு சிலர் மன அழுத்தம் அதிகமாகி ஹிஸ்டிரியா போன்ற நிலைக்கு ஆளாவது உண்டு.
உணவுகள் என்பது குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பாலை சுரப்பை அதிகரிக்கும் விதமாகவும், பிரசவ வலி மற்றும் காயங்கள் சீக்கிரமே ஆறும் விதத்திலும் அமைந்திட வேண்டும். பெரும்பான்மையான மருத்துவர்கள் பிரசவித்த தாய்மார்கள் பசிக்கின்ற போது எல்லாம் உணவுகளை உட்கொள்வது அவசியம் எனக் கூறுகின்றனர்.

புரத சத்துள்ள உணவுகள் ஏன் நல்லது?

ஒரு நாளைக்கு 3 முதல் நான்கு கப் அளவு புரத சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் நான்கு அல்லது ஐந்து முறை பால் பொருட்களையும் உட்கொள்ளுதல் வேண்டும்.
 பால் பொருட்கள் புரதச்சத்தை தருவதுடன் கூடுதலாக கால்சியம் சத்தை பெறவும் உதவி புரிகின்றன.
 ஆட்டிறைச்சி, கோழி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், கொட்டைகள், விதைகள் போன்றவைகளை எடுப்பதன் மூம் தேவையான புரதசத்தை பெற முடியும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகள் தாய்ப்பாலை பெருக்கும் அதேசமயம் பிரசவித்த தாய்க்கு உடல் எடை கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

விட்டமின்கள் அவசியமா?

 விட்டமின் ஏ , பி, சி என அனைத்தும் தாய்பால் மூலமாக குழந்தைக்கு செல்ல வேண்டும் என்பதால் தாய் நிறைய காய்கறிகள் , பழங்கள் சாப்பிட வேண்டும்.
விட்டமின் பி-12 அளவும் சரியான அளவு இருந்திட வேண்டும். ஏனெனில் பி-12 சத்து குறைவின் மூலம் சோர்வு, எடை குறைவு, வாந்தி போன்றவை ஏற்படும். இந்த விட்டமின் பி-12 இறைச்சி மற்றும் முளைகட்டிய தானியங்களில் நிறைய  உள்ளது.
காய்கறிகள் , கீரைகள் மற்றும் பழங்களில் ஆரோக்கியமான நார்ச்சத்து மற்றும் விட்டமின்களை கொண்டதாக உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மூலம் பொதுவாக பிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கலாம்.
ஆப்பிள், பப்பாளி ,ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, திராட்சை, ப்ளு பெர்ரி, அன்னாசி போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இரும்பு சத்து உணவுகள் இரத்த சோகையை விரட்டும்:

சில பெண்கள் பிரசவித்த பின் மிகவும் தளர்வாகவும், சோர்வாகவும் காணப்படுவர். இதற்கு இரும்பு சத்து குறைவால் வரும் இரத்த சோகைத்தான் காரணம்.
இதனைத் தவிர்க்க விட்டமின்கள்  மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். சிட்ரஸ் பழங்கள், தக்காளி, முருங்கை கீரை, பேரிட்சை , முட்டை,மாமிசம் போன்றவைகளில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. . கருப்பு எள் , வெல்லம் சேர்த்து உணவுகளையும் உட்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course