மாரடைப்புக்கு பின்னர் உணவு முறைகள்!

மாரடைப்புக்கு பின்னர் அச்சப்பட்டு கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சரியான மருத்துவ சிகிச்சையும், உணவில் மாற்றம் மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்கள் செய்து கொண்டால் போதும். மேற்கொண்டு இதய பாதிப்புகள் ஏற்படாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

மூன்று முக்கிய விதிகள்

Seasonal items

* உங்கள் ஊரில் விளையும், மலிவான விலையில் கிடைக்கும் சீசனில் வரும் காய்கறி, பழங்களை உண்ணுங்கள்.

* எங்கோ விளைந்தது, ஏசியில் சேமித்து வைத்தது என்று இல்லாமல், புத்தம் புதிய காய்கறிகள், பழங்களை உண்ணுங்கள்.

* உணவில் உப்பை குறைத்து, கொழுப்பில்லாதவகையில் மெனு லிஸ்ட் எடுத்து கொள்ளுங்கள். இந்த மூன்று விஷயங்களை கவனத்தில் கொண்டாலே போதும்.

உணவிற்க்கான நோக்கம் ஆரோக்கியம்

நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவும், உடலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இருக்குமாறு மாற்றி அமைத்துக் கொள்ளவும்.

* தினசரி உணவில் பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள், உலர் கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

* செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

* வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடல் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

* வறுத்த மற்றும் எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை தவிருங்கள்.

* உப்பு மிகுந்த ஊறுகாய், சாஸ் வகைகளை தவிர்க்கவும். குறைந்த உப்பு அல்லது உப்பு இல்லாமல் சாப்பிட பழகுங்கள்.

* பாட்டிலில் அடைக்கப்பட்ட பழஜூஸ், கோலா பானங்களை அறவே தவிர்க்கவும்.

* நிறைய தண்ணீர் குடிக்கவும்

* எண்ணெய் செலவில்லாத சமையல் ரெசிபிகளை தெரிந்துக் கொண்டு, அதன்படி தயாரிக்கவும்.

* உண்ணும் உணவு வேளையை மூன்றில் இருந்து ஐந்து வேளையாக மாற்றிக் கொண்டு, சிறிது சிறிதாக உண்ணவும்.

* தினசரி ஐந்து வேளை காய்கறிகள், இரண்டு வேளை பழங்கள் என்று உணவுப் பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.

* உணவில் மைதா, டால்டா, வெள்ளை சர்க்கரை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஆட்டு இறைச்சி, முட்டை மஞ்சள் கரு, நாட்டு கோழி எனில் தோல் உரித்த கோழி சாப்பிடவும்.

* பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அளவாக உண்ணவும். கொழுப்பை நீக்கிய பால் சேர்த்து கொள்ளவும்.

* மது, புகைப்பழக்கம் உள்ளவர்கள் அறவே விட்டொழியுங்கள்.

* முளைகட்டிய தானியங்கள் கலந்த சாலட் நிறைய சாப்பிடுங்கள்.

* மருத்துவரின் ஆலோசனைப்படி நடைப்பயிற்சிக்கு தவறாமல் செல்லுங்கள்.

நோயாளியாக எண்ணிக் கொண்டு இல்லாமல், திடமான மனதுடன் வாழ்வியல் முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டு ஆயூளை நீட்டிக்கலாம்.


A healthy-heart diet helps to keep arteries clean after angioplasty or stents. In order to prevent heart disease, packaged foods, drinking and smoking. Dairy products can be consumed less. It is better to take seasonal fruits and vegetables than preserved items. Including Sprouts, Dried Nuts, Dried Fruits, Raw Vegetables, Fruits, Whole grains in diet plan helps to have a healthy heart and prevents heart attack in future. It is also advised to have a habit of walking.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course