உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!!

நமது சமையலில் பச்சைப் பட்டாணிக்கு என்று தனி இடம் உண்டு. பட்டாணி என்றாலே வாயு தொல்லை என்று நிறைய பேர் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், பட்டாணி காய்கறிகள் வகையில் வராது லெகூம் எனும் விதைகள் கீழ் வருவதால் தான் அதில் உள்ள புரதம் சிலருக்கு செரிமானக் கோளாறை ஏற்படுத்துகிறது. பைசம் சட்டைவம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடியின் விளைந்த விதைகள் தான் பச்சைப் பட்டாணி . இவற்றில் பலவிதமான வகைகள் உண்டு.

 

 

பச்சை பட்டாணி ஏன் நல்லது?

பச்சை பட்டாணியில் அதிக அளவு   கார்போஹைட்ரேட் உள்ளது. அதுவும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் – complex carbohydrates.இதற்கு குறைந்த கிளைசெமிக் எண் மதிப்பு உடையது என்பது இதன் சிறப்பு.இதன் கலோரி மதிப்பு கூட குறைவுதான். அரை கப் பச்சைப் பட்டாணியின் கலோரி மதிப்பு  62 தான். இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் கே , தயமின் , ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பட்டாணி உடல் எடை குறைக்குமா?

 

 

பச்சைப் பட்டாணியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதனை உட்கொண்டால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இதில் புரதம் நிறைந்துள்ளது என்பது கூட உடல் எடை குறைக்க உதவும்.

இதில் உள்ள  நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதில் நொறுக்கு தீனியின் அளவு குறைகிறது. மேலும் இது குறைந்த அளவு எரிசக்தியை கொடுக்கிறது. அத்துடன் உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இதனை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல்  எடையை குறைக்கலாம்.

இதயக் கோளாறுகளை நீக்குகிறது?

உடல் எடையை மட்டும் அல்ல இதயக்கோளாறுகள் நீக்குகிறது. இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை இதில் உள்ள வைட்டமின் பி3(நியாசின்), பி1(தயாமின்) மற்றும் ஃபோலேட்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை  தடைசெய்கிறது. பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. 

மலச்சிக்கலை நீக்கும்:

 

பச்சை பட்டாணியில் உள்ள நார்ச்சத்தானது செரிமானப் பாதையில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது. இவை உணவினை நன்கு செரிக்க செய்கிறது. மேலும் இக்காயில் கரையாத நார்சத்துகள் காணப்படுகின்றன.பச்சை பட்டாணி மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இவை உடலில் இருந்து கழிவு பொருட்களை எளிதாக வெளியேற்றுகின்றன. 

 எலும்புகளுக்கு வலு சேர்க்கும்:

பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் கே-வானது உடலானது கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. மேலும் இக்காயில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்து அவற்றினை வலுவாக்குகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas