சரிவிகித உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் உணவு உண்டபின் என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

*சாப்பிட்டதும், ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும்.அப்போது தான் செரிமானம் எளிதாக நடக்கும்.
*உணவுக்கு பின் வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க, ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். ஆகவே குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிட்டபிறகு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.
* உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.ஆனால் நமது விருந்தோம்பலில் இலையில் அறுசுவை உணவுடன் பழங்களும் உண்டு.

*சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை உள்ள அமிலங்கள் உணவில் உள்ள புரதங்களுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.
*உணவு உண்டபின் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் , புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
*உணவு உண்டபின் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், செரிமானக் கோளாறு ஏற்படும்.
* உணவு உண்ட உடனே படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. மேலும் வயிற்றில் கொழுப்பு சேர இதுவும் ஒரு காரணம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







