சிக்கு முடியினால் பிரச்சனையா? உங்களுக்கான தீர்வு இதோ!

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதே அவர்களின் முடி தான். இந்த நாகரீக காலகட்டத்திலும் பெண்கள் முடியை நீளமாக இருப்பதையே விரும்புகின்றனர். பெண்களின் முடியை வைத்தே வர்ணித்து  பல கவிஞர்களும், புலவர்களும் கவி பாடியுள்ளனர். அந்த அளவுக்கு பெண்களின்  நீளமான முடிக்கு முக்கியத்துவம் உள்ளது. முடி பராமரிப்பு என்றாலே பல வித செலவினங்களையும் சிரத்தையுடன் செய்து வருகின்றனர்.

 

பல பார்லர்கள் முடி பாதுகாப்புக்கு என்றே  உள்ளன. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் பெண்களின் முடியினைக் கொண்டே இயங்கி வருகின்றன. பெண்கள் அந்த அளவுக்கு தங்களின் முடிக்கு முக்கியத்துவம்  தருகின்றனர் என்பது தெரிகிறது . முடி உதிர்தல், முடியின் வளர்ச்சியை தூண்டுதல், பொடுகு தொல்லை என பலவிதமான முடி பிரச்சனைகளுக்கு பெண்கள் பல ஆயிரங்களை பார்லர், மசாஜ் சென்டர்களில் செலவிடுவதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.

தலை முடியில் ஏற்படும் வெடிப்பு, சிக்கு, முடி உடைதல் பெண்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சல், எரிச்சல் வரை என பல பிரச்சனைகள்  ஏற்படுத்தக் கூடும். அதிலும், பெண்களுக்கு முடியில் ஏற்படும் சிக்கினை எடுப்பதே மிகமிக சவாலான விஷயமாக உள்ளது. சிக்கு எடுப்பதற்காகவே  மார்க்கெட்டில் பல எண்ணைகளும், கிரீம்களும் பல பெயர்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன.

இது போன்ற செயற்கையான பொருட்களை உபயோகிப்பதன் மூலம் தற்காலிகமான தீர்வு மட்டுமே கிடைக்கும். இதனால் பல பிரசனைகளும் ஏற்படக்கூடும் சில செயற்கையான பொருட்கள் சிலருக்கு அலர்ஜி, தோல் பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது. இதனால் பெண்கள் பலரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

இயற்கை முறை

முடி பாராமரிப்புக்கு இயற்கை முறையை பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பொலிவோடும் அழகாக காட்சியளிக்கும். பழங்காலத்தில் இயற்கை முறையில் தயாரித்த சீயக்காய், எண்ணெய் போன்ற பொருட்களையே பெண்கள் முடிக்கு பயன்படுத்தி வந்தனர். என்றுமே இயற்கை முறையான சிகிச்சையே சிறந்த தீர்வை தருவதோடு, மீண்டும் அந்த பிரச்சனை வராமல் தடுக்கும் இயற்கை முறையில் தயாரித்த மாய்சுரைசரை பயன்படுத்தி தலை வாருவதன் மூலம் முடி வறட்சி நீங்கி, சிக்கிலாமல் இருக்கும். அத்தகைய இயற்கை முறை மாய்சுரைசரை எப்படி உங்களது வீட்டிலே தயாரிப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆலோவேரா மாய்சுரைசர்

நமது முடியினை ஆலோவேரா மாய்சுரைசர் கொண்டு சுலபமாக பாதுகாக்கலாம். நாமே எளிய முறையில் இந்த மாய்சுரைசரை தயார் செய்து தலை வாருவதற்கு முன்பு பயன்படுத்தி சிக்கினை எடுத்தால் முடி உதிர்தல் குறைவதோடு, முடியின் பொலிவும் அதிகரிக்கும்.இயற்கை முறையில் இருப்பதால் இந்த மாய்சுரைசர் முடிக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்பது நிதர்சனமான உண்மை. சரி வாங்க எப்படி இந்த இயற்கையான மாய்சுரைசரை தயாரிப்பது என்று பார்க்கலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஆலோவேரா ஜெல்லுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் கிளிசரின் மற்றும் 5 டேபிள் ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சிறிதளவு எசென்சியல் ஆயில் (ஆரஞ்சு, லாவண்டர், ரோஸ்மேரி போன்ற வாசனையுள்ள எண்ணெய்யை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் முடிக்கு நல்ல வாசனையை கொடுப்பதோடு, முடியின் தன்மையையும் காக்கிறது) ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாய்சுரைசரில் இயற்கை முறையில் உள்ள ஆலோவேரா ஜெல் குளிர்ச்சியை உங்க உடலுக்கு  தந்து முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. இதில் மேலும் கிளிசரின் மற்றும் ஆலோவேரா ஜெல் நமது முடியிலுள்ள சிக்கினை எடுக்கவும், முடியினை மென்மையாக வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், ஆலோவேராவில் உள்ள தாதுக்கள் நமது முடியை முடி உதிர்வில் இருந்தும்  காக்கிறது.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஆலோவேரா ஜெல், வெஜிடபிள் கிளிசரின், டிஸ்டில்டு வாட்டர், எசென்சியல் ஆயில் ஆகியவற்றை நன்றாக  கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்களது அறை வெப்ப நிலையிலே வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். சிக்கு எடுப்பதற்கு முன் இந்த கலவையை உங்கள் முடியில் ஸ்ப்ரே செய்துவிட்டு பின்னர் சீப்பினை கொண்டு மெதுவாக சீவ வேண்டும்.

இதனால் முடி உதிர்வு குறைவதோடு அடுத்த முறை முடியில் ஏற்படும் சிக்கும் குறையும். உங்கள் முடிக்கு இதில் கலந்துள்ள ஆலோவேரா குளிர்ச்சியை தந்து முடி உதிர்வில் இருந்தும், முடி வறட்சியில் இருந்தும் காக்கிறது. முடி உதிர்தல் குறைந்தாலே முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் நீங்கள் முடி பற்றிய மன உளைச்சலில் இருந்து எளிதில் விடுபடலாம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course