திரிபலா சூரணம் என்பது மூன்று மூலிகைகளின் கூட்டுப் பொருள் ,இது ஒரு காய கற்பம்.
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்து தயாரித்ததே திரிபலா சூரணம்.
கடுக்காய்
துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத,கப தன்மையைச் சீராக்கும் தன்மை இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். கடுக்காய் சுத்தி செய்து தான் மருந்தாக பயன்படுகிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் ஒரு காயகல்பம் , என்றும் மங்கா இளமைத் தரும் அமிர்தம்.
வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இது மிகவும் பயன்படுகிறது.
தான்றிக்காய்
தான்றிக்காய் மரத்தினை மகாவிருட்சம் என்பர், எல்லாவகை இருமல் களையும் , சளியையும் நீக்கவல்லது.
தான்றிக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி, காயின் மேல்தோலை மட்டுமே மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும்.
திரிபலா சூரணம் செய்முறை:
கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்து நன்றாக நிழலில் உலர்த்தி காயவைக்கவும். காய்ந்த மூன்றையும் அரைத்துப்பயன்படுத்தவும்.எல்லா
கடைகளிலும் எளிதாக கிடைக்கும்.பொடி அல்லது மாத்திரை வடிவில் கிடைக்கிறது.
திரிபலா சாப்பிடும் முறை
*மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.
*இரவில் பால் குடித்து விட்டு உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் பால் குடித்து ஒரு மணிநேரம் கழித்து திரிபலாவை எடுத்து கொள்ளவும்.
திரிபலா சூரணம் இரவில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து. ஒட்டுமொத்த உடலின் நலனுக்காக தினமும் இரவில் எடுத்துக் கொள்ளலாம். இதன் பலன்களை பட்டியல் இட பக்கங்கள் போதாது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News