பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. இந்த பழத்தை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம் மற்றும் உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் எனவே துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது.

சுவை மட்டுமில்லாது, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
தலைவலிக்கு சிறந்த நிவாரணி:

மேலும், துரியன் பழம் மிகச்சிறந்த வலி நிவாரணியாக விளங்குகிறது. மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி. இது முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதால் இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் வைட்டமின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது.
உடல் வலுவிழந்தவர்களுக்கு உதவுகிறது:

அனைத்து வயதுடையவர்களும் துரியன் பழம் உண்பதற்கு ஏற்ற ஒன்றாகும். பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்புச் சுவை உடையது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளன. மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடலில் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்து.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

மேலும், இந்த பழங்களை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்த குறையை போக்க துரியன் பழம் பயன்படுகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கைகைக்கு உதவுகிறது:

துரியன் பழம் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை ஏற்படுத்தும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. இந்த பழத்தில் ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரத்தச் சோகையை குணமாக்கும்:

ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகையில், வைட்டமின்கள் பி, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை, மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன. நகங்களில் பிரச்சினை இருக்கும் போது, இந்த பழத்தின் வேர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மாங்கனீசு அதிகம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். இரும்பு, போலிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் ரத்தச் சோகையை குணமாக்கலாம்.
மன அழுத்தத்தை போக்கும்:

மேலும், இப்பழம் இரும்புச்சத்து அதிகம் உடையது. துரியன் பழத்தை சாப்பிட்டு வருவதால், அதிலுள்ள வைட்டமின் சி சத்து இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் இருப்பவர்களின் இளமையை மீட்டு தருகிறது. மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்தது. இதில் பைரிடாக்ஸின் எனும் வைட்டமின் அதிகம் நிறைந்துள்ளது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







