சர்க்கரை நோயாளிகள் பழங்களை உண்ணலாமா?

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் சந்தேகம் தான் பழங்கள் சாப்பிடலாமா என்பது தான் .மருத்துவ அறிஞர்கள் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பழம் சாப்பிடலாம் ஆனால் எந்த பழம் , பழத்தின் அளவு மற்றும் பழம் சாப்பிடும் நேரம் என் இந்த மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்கள்.

பழச்சர்க்கரை அதாவது ப்ரக்டோஸ் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்குமா?

மனிதன் , விலங்கு மற்றும் தாவரங்கள் அனைத்தும் ஆற்றலை பெறுவது உணவின் மூலம் பெறப்பட்ட கார்போஹைட்ரேட் சிதைந்து க்ளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கும் போது தான். ஆனால் பழங்களில் இயற்கையாக நமக்கு கிடைப்பது பழச்சர்க்கரை எனப்படும் ப்ரக்டோஸ். ப்ரக்டோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் ஆனால் பழங்களை அதிலுள்ள கரையும் நார்ச்சத்து ( soluble fibre) உடன் உண்ணும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க மிகவும் தாமதமாகிறது. ஆகவே பழங்களை பழச்சாறாக அருந்தாமல் தோலுடன் கடித்து உண்ண வேண்டும்.

*இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எந்தெந்த உணவுக்கு அதிகரிக்கும்?

பொதுவாக நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் நேரத்தைப் பொறுத்து அந்த உணவை சர்க்கரை நோயாளிகள் உண்ணலாமா ? வேண்டாமா என்று முடிவு செய்கிறார்கள். இந்த அடிப்படையில் ஜங்க் புட் , பழங்கள் , காய்கறிகள் என அதன் கெடுதல் தன்மைக்கு ஏற்ப வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

*விரைவில் சர்க்கரையின் அளவை இரத்தத்தில் உயர்த்தும் உணவுப் பொருட்கள் :

பேக்கரி பொருட்கள் , கோகோ கோலா போன்ற பானங்கள் , பழச்சாறு , சர்க்கரை மற்றும் அதில் சேர்த்து செய்த இனிப்புகள் , கிளைசிமிக் எண் மதிப்பு அதிகம் உள்ள பழங்கள் , பாலிஷ் செய்த அரிசி , க்ளூட்டன் நிறைந்த கோதுமை என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

*மெதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் :

பழங்கள் , கைக்குத்தல் அரிசி , தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் .இவை அனைத்தும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் என்பதால் இரத்தத்தில் சர்க்கரை கலப்பதைத் தாமதமாக்குகிறது. மேலும் மெட்டபாலிசத்தை தூண்டுவதால் விரைவில் உணவு செரிமானம் அடைந்து ஆற்றலாக எரிக்கப்படுகிறது.

*மிக தாமதமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகள் :

கீரைகள் , காய்கறிகள் , சிலவகை பழங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் தாமதமாக அதிகரிக்கும். புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

*எந்த வகையான பழங்களை சர்க்கரை நோயாளிகள் உண்ணலாம்?

ஆப்பிள் , பெர்ரி , நாவல்பழம் , செர்ரி , அவகோடா, கிவி,கொய்யா , பேரிக்காய் மற்றும் ஆரஞ்சு . ஒரு நாளைய உணவை ஐந்து பிரிவுகளாக பிரித்து கொள்ள வேண்டும். இதில் ஒன்று அல்லது இரண்டு முறை பழங்களை அதன் தோலுடன் சாப்பிட வேண்டும். பொதுவாக பழங்கள் என்றாலே விதை விளைந்து இருப்பது அனைத்தும் பழங்கள் என வகைப்படுத்தினால் தக்காளி , வெள்ளரி கூட இந்த பட்டியலில் வரும்.

*எந்த வகை பழங்களை சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடாது?

மாம்பழம் மிகுந்த இனிப்பு உடையது ஆகவே உடனே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால் மிகக்குறைந்த அளவில் தான் உண்ணவேண்டும். வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் என்பதை அதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற நரம்புகளுக்கு வலுவூட்டும் சத்துக்கள் தேவை என்பதால் இதனையும் வாரம் ஒருமுறை உண்ணலாம். பழம் சாப்பிட்ட சில நிமிடங்களில் நடைப்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளில் ஈடுபட்டு அந்த ஆற்றலை எரித்து விடவேண்டும். பேரிட்சை மற்றும் தர்பூசணி போன்றவை சர்க்கரை நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.

*பழங்களை எந்த வடிவில் உண்ணலாம் ?

ஆப்பிள் பழங்களை அதன் தோலுடன் தான் உண்ண வேண்டும். பெர்ரி போன்றவற்றை ஓட்ஸ் போன்ற கஞ்சிகளுடன் சேர்த்து உண்ணலாம். கொய்யாவை முழுவதும் பழுக்காமல் ஓரளவு காய்வெட்டாக இருக்கும் போது உண்ணவேண்டும். திராட்சையை பழச்சாறாக அருந்தாமல் வெறும் பழத்தினை உண்ணலாம். நாவல்பழம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

கவனிக்க வேண்டியவை:

பழங்கள் மட்டும் அல்லாமல் எந்த வகை உணவை உட்கொண்டாலும் உணவு உண்ட பதினைந்து நிமிடங்களில் இரத்தத்தில் சர்க்கரை மூலக்கூறுகளாக மாற ஆரம்பிக்கும். ஆகவே உணவு உண்டபின் படுக்கைக்கு செல்வதை தவிர்த்து மெதுவாக நடக்கலாம் அல்லது வீட்டு வேலைகளில் ஈடுபட்டு உணவின் மூலம் பெறப்பட்ட க்ளுக்கோஸ் மூலக்கூறுகளை ஆற்றலாக செலவழிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டாலே போதும். உணவு உண்ட பின் நிறைய தண்ணீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேற நிறைய தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும்.

அரிசி உணவு அதாவது மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சாப்பிட்டு அதனுடன் பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை நோயினை தீவிரமாக்கும். ஆகவே பழங்களை ஒரு வேளை விரும்பி உண்ணும் போது பிற மாவுச்சத்து உணவுகளை தவிர்க்கவும் . வெறும் பழங்களுடனே அந்த வேளை உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

ஆரம்பகாலத்தில் இதனைக் கடைபிடிப்பது கடினமான காரியமாகும்.
ஆனால் எதனையும் பழக்கப்படுத்திக்கொள்ளும் போது சுலபமான வேலை.
ருசிக்காக நோயுடன் அவதியுறும் வாழ்வை விட அளவாக உண்டு ஆரோக்கியமான வாழ்க்கை தான் ஆகச்சிறந்த செல்வம்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course