நம் உடலில் எந்த பாதிப்பு வந்தாலும் கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்!

நம் உடலில் எந்த ஒரு உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே எந்த பாதிப்பாக இருந்தாலும் அதை சரி செய்யலாம். இது குறித்து பின்வருவனவற்றுள் காண்போம்.

கட்டை விரல்

உங்களுடைய கட்டை விரலுக்கு அழுத்தத்தைக்கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். இதனால் உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவ பயன்படுகிறது.கட்டை விரலானது,வயிறு பகுதியுடன் மண்ணீரல் இணைந்துள்ளதால் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்

 

 

ஆள்காட்டி விரலானது உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது மேலும் ஆள்காட்டி விரலுக்கு அழுத்தத்தைக்கொடுத்து பயிற்சி செய்தால் உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைப்பதாகும். ஆள்காட்டி விரல் உங்களுடைய சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைந்துள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் இருக்கவும், நீர்வறட்சி உண்டாகாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

 

நடுவிரல்

உங்களது கோபத்தை குறைப்பதற்கு நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்தால் போதும். இரத்த ஓட்டத்தை தலை பகுதியில் சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் நடுவிரல் இணைந்துள்ளதால் பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்

கட்டைவிரலுடன் ஏறத்தாழ ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களுக்குள் இருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம். மேலும் நுரையீரலுடன் மோதிர விரல் இணைந்துள்ளதால் சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும் நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமையை கொடுப்பதால் உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சுண்டுவிரல்

இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா? | Know what all your fingers say about you - Tamil BoldSky

சுண்டுவிரலுக்கு அழுத்தத்தைக்கொடுத்து பயிற்சி செய்வதால் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இதனால் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதர உடல் பாகங்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும் இது மூளையின் செயல்திறனையும் ஊக்குவிக்கிறது, இது உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படுத்துவதாகும்.

உள்ளங்கை

உள்ளங்கை அரித்தால் பணம் வராது, வியாதி தான் வரும் - அறியாத ரகசியம்

மன அழுத்தம் கொடிய நோயாக எல்லோரையும் பாதித்து வருவதால் ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. அழுத்தம் கொடுத்து உள்ளங்கையில் பயிற்சி செய்வதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க செய்கிறது. மேலும் , உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து சீக்கிரம் விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course