இது குறித்து ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படேல் கூறுகையில், “இந்தியன் பிரீமியர் லீக் 2021 க்கான அதிகாரப்பூர்வ கூட்டாளியாக அப்ஸ்டாக்ஸ் எங்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் கிரிக்கெட் லீக்களில் ஒன்றான ஐபிஎல், இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் – வர்த்தக தளமான அப்ஸ்டாக்ஸுடன் இணைவது பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

கூட்டாண்மை குறித்து அப்ஸ்டாக்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், “ஐபிஎல் 2021க்காக பி.சி.சி.ஐ உடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில், கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, இது நமது கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விளையாட்டு மற்றும் நிதியின் இந்த ஒருங்கிணைப்பின் மூலம் நாடு முழுவதும் நிதி குறித்த விழிப்புணர்வை பரப்ப உத்தேசித்துள்ளோம்” என்றார்.







