மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய முக்கியமான மருத்துவ பரிசோதனைகள் குறித்து பார்ப்போம். திருமணம் செய்வதற்கு முன்பு ஆண்-பெண் இருவரும் ஜாதக பொருத்தம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
ஜாதகம் பார்த்து இருவரில் யாராவது ஒருவருக்கு தோஷம் இருந்தாலும் அதனை நீக்குவதற்கு முயற்சி எடுப்பார்கள். மருத்துவ ரீதியாக சில பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இரத்த பரிசோதனை செய்வதன் மூலம் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். திருமணத்திற்கு முன்பாக மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய முக்கியமான மருத்துவ பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.
பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள் என்பது எச்.ஐ.வி-எய்ட்ஸ், சிபிலிஸ், கோனோரியா, ஹெர்பெஸ், சான்கிராய்டு போன்றவை பால்வினை நோய்கள்(எஸ்.டி.டி) என்று அழைக்கப்படுகின்றன. இவை பாலியல் உடலுறவின் போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி விடக்கூடும். அதிலும் எய்ட்ஸ் ஆபத்தானது. இத்தகைய பரிசோதனைகள் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்து தப்பித்து விடலாம்.
இரத்த வகை

இரத்த வகையை திருமணத்திற்கு முன்பு துணையாக வர இருப்பவரிடம் அறிந்து கொள்வதும் நல்லது. அது பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மனைவிக்கு ஆர்.எச் நெகட்டிவ் ஆகவும், கணவருக்கு ஆர்.எச் பாசிட்டிவ்வாகவும் இருந்தால் அது பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் இதனை முதலிலேயே கண்டறிந்து அதற்குரிய ஊசி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
கருவுறுதல் சோதனை

பல பேர் இன்றைய காலகட்டத்தில் தாமதமாகத்தான் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அப்படி தாமதமாக கல்யாணம் செய்வது கருத்தரிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆதலால் ஆண், பெண் இருபாலரும் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
மரபணு சோதனை

மரபணு சோதனை என்பது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நோய், மார்பக புற்றுநோய் போன்ற பல நோய்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.அவரவர் குடும்பத்தினரின் மருத்துவ நிலையையும், நாள்பட்ட நோய்கள் பற்றிய விவரத்தையும் கல்யாணத்திற்கு முன்பே இருவரும் தெரிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் பின்னாளில் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மனநல பரிசோதனை

ஆண், பெண் இருபாலரும் நல்ல மன நிலையில் இருந்தால்தான் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமையும். அதனால் இருவரும் தேவைப்பட்டால் மனநலம் சார்ந்த பரிசோதனை செய்வது அவசியம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News








