அதிக எடை பிரச்சனையா? கிச்சன்ல இதை பண்ணினாலே போதும்  எடை ஈஸியா குறையும்!!

இன்று அதிக எடை ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. எடையை நீங்கள் குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்போ நிச்சயமா நீங்க தான் இதை படிக்கணும்.

 சில மாற்றங்களை உங்கள் வீட்டில் செய்வதன் மூலம் எடை குறைப்பை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். நீங்கள் உங்கள் சமையலறையில் செய்யும் மாற்றங்கள் எடை இழப்பில் அதிகம் உதவுகிறது. மளிகை கடைக்கு செல்வதற்கு முன் என்ன வாங்க போகிறீர்கள் என்பது குறித்த ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். உங்களிடம்  உணவு இடைவேளைக்கு தேவையான ஆரோக்கியமான பொருட்கள் இருந்தால் தேவையற்ற ஜங்க் பொருட்களை தவிர்க்கலாம். கடைகளில் அதிக நேரம் செலவழித்து ஆரோக்கியமான பொருட்களை தேர்ந்தெடுங்கள்.

​ஃப்ரிட்ஜில் உணவுகள்

ஃப்ரிட்ஜில் உணவுகளை சேமித்து வைத்து  உடனுக்குடன் உண்பது கலோரிகளை குறைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சில நேரங்களில் ஏற்படும் பசி உங்களது எடை இழப்பு முயற்சியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். நீங்கள் கூட்டுக் குடும்பமாக வசிப்பவராக இருந்தால் இது நிச்சயம் சாத்தியம் அற்றது. ஒரு நாளைக்கு சுறுசுறுப்பாக இருக்க குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவுகளும், இடையில் ஸ்நாக்ஸ்களும் தேவை. அதிகமாக வெளியில் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்வது உங்களது குடும்பத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும், மேலும் உடல் எடையை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

ஆரோக்கியமான தின்பண்டங்களை உங்கள் சமையலறையில்  சேமிப்பது சிறந்தது. டார்க் சாக்லேட் போன்ற இனிப்புகளை வைத்திருப்பதில் தவறில்லை. ஆனால் உங்கள் கண்ணில் படும்படி எடுத்த உடன் அதை வைக்காதீர்கள். மக்கள் பொதுவாக ஜங்க் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு காரணம் அது எளிதில் சமைக்கக் கூடியதாக இருப்பதே. ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் இது போன்ற ஜங்க் உணவுகளின் சுவையை மீட்டெடுக்க முடியும்.

முன்னரே பேக் செய்யப்பட்ட குறைந்த கொழுப்புள்ள சீஸ்கள், நட்ஸ், உலர் பழங்கள், கட் செய்யப்பட்ட காய்கறிகள் போன்றவற்றை எளிதாக சமைக்க வாங்கி வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு வார இறுதி நாட்களில் நேரமிருந்தால் ஒரு வாரத்துக்கு தேவையான தின்பண்டங்களை செய்து வைத்துக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் பிசியாக இருக்கும் நேரத்தில் அதை உடனடியாக எடுத்துச் செல்ல முடியும்.

சமையல் அறை பட்டியல்

என்ன சமைக்கப் போகிறீர்கள் வரும் வாரங்களில் என்பதை அறிந்து, குறிப்பெடுத்து மார்க்கெட்டிற்கு செல்லுங்கள். இது கடைசி நிமிடத்தில் பொருட்கள் இல்லாமல் சமைக்க முடியாமல் போகும் பதட்டங்களை தவிர்க்க உதவும். ஃப்ரிட்ஜில் என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை நிபுணர்கள்  பட்டியல் வைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் வாரம் முழுவதும் உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உங்கள் பிரிட்ஜில் இருக்கும். எனவே நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண முடியும்.

ஸ்மார்ட் தீர்வு

மொத்தமாக சாமான்களை எப்பொழுதும்  வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் வீட்டில் தேவைக்கு அதிகமாக பொருட்கள் இருக்கும் பொழுது அது நம்மை தேவைக்கதிகமாக உட்கொள்ளவும் வைக்கலாம். ஒருவேளை மொத்தமாக பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது தான் சிறந்தது என்று நீங்கள் நினைத்தால், வீட்டுக்கு வந்தவுடன் அந்த வாரம் அல்லது மாதத்திற்கு தேவையான பொருட்களை தனியாகவும், மீதமுள்ள பொருட்களை தனியாகவும் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும்.

மளிகை சாமான்கள் மொத்தமாக  வாங்கும் போது அதில் சோடா மற்றும் ஜங்க் ஃபுட் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று அவசியமில்லை. மாறாக உலர்ந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சிகள், பருப்புகள், ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான பொருட்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

தேவையானதை சேமித்தல்

தேவையான உணவுகளை உங்களுக்கு எடுத்து அதில் எவ்வளவு கலோரிகள் உள்ளது என்பதை அறிந்து தனியாக சேமித்து வைத்துக் கொள்ளவும். இதனால் அதிக கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

ஆரோக்கிய உணவுகள்

சுவையான பல ஆரோக்கியமற்ற உணவுகள் உங்கள் சமையலறையில் இருந்தால் அதை உங்கள் கண்ணுக்கு மறைவாக மாற்றி வையுங்கள்.  உங்கள் செல்பில் ஆரோக்கியமான உணவுகளை முதலில் கண்ணில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

சமையலறை

நீங்கள் சமைக்க ஒரு சிறந்த இடமாக உங்கள் சமையலறை இருக்க வேண்டும். உங்கள் வீட்டை சில சமயங்களில்  புதுப்பிப்பதற்கான நேரமோ அல்லது பணமுமோ உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

பார் நாற்காலிகளில் அல்லது டிவி முன் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். காய்கறி நறுக்கும் பலகை உங்களுக்கு எளிதில் கிடைக்கும்படி ஆக வைத்துக் கொள்ளுங்கள். பிரகாசமாகவும் ஒளியுடனும்  உங்களது கிச்சன் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல இசையை சமையலறையில் ஒலிக்க விடுங்கள். கிடைக்கும் இடைவெளியில்  உங்கள் சமையலறையில் நடனமாடி புத்துணர்ச்சியுடன் இருங்கள்.

​சுகாதாரம்

ஒரு டேபிளில் நீங்கள் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் வசதியாக இருக்கும்.  தேவையான உணவுகள் உங்களுக்கு உங்களது டேபிளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பஃபே பாணியிலான உணவு முறையை உங்கள் வீட்டில் முயற்சிக்கலாம். இந்த முறையில் நீங்கள் குறைவான உணவுகளை உட்கொள்ள முடியும்.

ஸ்டோர் செய்ய வேண்டிய உணவுகள்

நீங்கள் உணவு உண்ணுவதற்கு முன் மீதம் உள்ள உணவுகளை பத்திரமாக சேமித்து வைத்து விடுங்கள். இது உங்களது வேலைப்பளுவை குறைக்கும். அந்த உணவை  மேலும் உண்ண வேண்டும் என்று தோன்றும் போது திரும்ப எடுத்து சூடு செய்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினால் சாப்பிடும் அளவும் குறையும். எனவே இது உங்களை அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாமல் இருக்கவும், ஈசியாக அடுத்த நாளைக்கான உணவை  எடுத்துச் செல்லவும் உதவும்.

 

​ஆரோக்கியமற்ற உணவுகள்

 ஆரோக்கியமற்ற உணவுகளான நமது உடலுக்கு கேக் மற்றும் இனிப்பு பண்டங்களை கண்ணுக்கு படாமல் நன்றாக ஒரு பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும். இது ஆரோக்கியமற்ற உணவுகளை உங்களுக்குத் தோன்றும் போதெல்லாம் சாப்பிடுவதில் இருந்து தடுக்கிறது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course