
தற்போது 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் புதியதாக 68,020 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், நேற்று ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடந்த 24 – மணி நேரத்தில் 35,498 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1.2 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2020 தொடங்கி தற்போது வரை 1,61,843 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் 108 பேர் உயிரிழந்தனர். அங்கு பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து டெல்லியில் மாநில அரசு உத்தரவு திருமண விழாவிற்கும் மற்றும் இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவேண்டும் என தடை விதித்துதுள்ளது.
கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும்
சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் தீவிரமாக நடைபெறுவதால் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை அடைகிறது என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடத்தக்கது.







