ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் அடுத்த நயன்தாரா??

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும், தனி ஒருவன், அடங்க மறு, பூமி போன்ற படங்கள் பெரும் வரவேரூ பெற்றன. மேலும், ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலில் கூட நடித்து வருகிறார்.அதையடுத்து தற்போது ஜெயம் ரவி புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பூலோகம் படத்தை இயக்கிய குழுவுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி கெங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இதுவும் ஈழத்தமிழர்களுக்கு உதவும் கெங்ஸ்டராக நடிகையுள்ளாராம்.தற்போது இந்த படத்தின் ஹீரோயின் யார் என்று எதிர்பார்த்தநிலையில் தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா என்று அழைக்கப்படும் பிரியா பவானி ஷங்கர் தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தனியார் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான பிரியா பிறகு மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் கைவசத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course