ரசிகர்களால் மன வருத்தத்தில் உள்ள நடிகை???

கொரோனா தொற்றின் காரணமாக ரிலீஸ் ஆகும் படங்கள் பாதிக்கு மேல் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றது. முன்னணி நடிகர்களை தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்கள் வரை அனைவரின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் பெரும் வெற்றி பெற்று அவருக்கு தேசிய விருதும் பெற்று தந்தது. அந்த படத்தில் நடிகை சாவித்ரியின் உடல் அமைப்பை போன்று இருக்க உடல் எடையை அதிகரித்தார். அந்த படத்திற்கு முன்பு வரைக்கும் கீர்த்தியை சப்பி மற்றும் கியூட் என்று அழைத்து வந்த ரசிகர்கள் தற்போது அவர் முழு உடல் எடையை குறைத்து. மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

கீர்த்தி உடல் எடையை குறைத்த பின்பு வெளியான இரண்டு படங்களுமே ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தேர்ந்தெடுத்து நடித்தார். இந்த படங்கள் இரண்டும் ஓடிடி தலத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகளும் குறைந்து தற்போது கைவசத்தில் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டும் உள்ளதாம். தற்போது இவர் நடித்துள்ள குட்லக் சகி படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் ஓடிடி நடிகை என்று கிண்டல் அடித்து வருவதால் இந்த படமும் ஓடிடியில் வெளியாவதால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளாராம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course