சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் குருவாயூர் கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா நோய் தொற்று மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய் தாக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், மக்கள் கூடும் பொது இடங்களான கோவில்,மால்,பூங்கா ஆகியவற்றில் குறைவான மக்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.இந்நிலையில், கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களான சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் குருவாயூர் கோவில் இரண்டிற்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரும் பக்தர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்து வருகிறது கோவில் நிறுவனத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளார். பாதுகாப்பிற்காக பக்தர்களின் வாகனங்கள் முக்கிய நுழைவு வாயில் அனுமதிக்காமல் சில தூரத்திலேயே நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், மோகன்லால் தரிசனத்திற்கு வந்திருந்த பொது அவரது காரை முக்கிய நுழைவு வாயில் மூலம் அனுமதித்ததற்காக பாதுகாப்பு பணியில் இருந்து 3 பணியாளர்களை கோவில் நிறுவனத்தினர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த செய்தி கேரளாவில் பரபரப்பை உருவாகியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News