இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி காந்த நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்டு லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார் படக்குழுவினர். எப்போதும் போஸ்டர் மற்றும் படத்தின் கட் அவுட்க்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இந்தமுறை ரஜினி ரசிகர்களின் செயலால் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏனென்றால் ரஜினியின் தர்பார் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதால் இந்தமுறை அண்ணாத்த படம் வெற்றி பெறவேண்டும் என்று ரசிகர்கள் போஸ்டர்க்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்துள்ளனர்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு ஆட்டை பலி கொடுத்து அந்த ரத்தத்தில் ரஜினி போஸ்டர்க்கு ரத்தாபிஷேகம் செய்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து ரஜினி அவரது ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது போன்ற கடுமையான காரியங்களை தவிர்க்க கற்றுத்தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News