அக்கட தேசத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் தனுஷ்!!

தமிழில் சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே பெரும் வெற்றி பெறுகிறது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வரும்நிலையில் ஹாலிவூடில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன்,வடசென்னை,கர்ணன்,ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் அவருக்கு பல்வேறு பாராட்டுகளை வழங்கியது.அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் தனுஷ் தற்போது தெலுங்கு திரையிலும் விரைவில் அறிமுகமாக உள்ளார். தெலுங்கு இயக்குனர் சுரேஷ் கும்மலா இயக்கவிருக்கும் புதியப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்திற்கு பிறகு ரங்தே படத்தை இயக்கிய வெங்கட் அட்லூரி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிறகு மற்றொரு இயக்குனரும் தனுஷிடம் கதை கூறியுள்ளாராம்.தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வரும் தனுஷ். அந்த படத்தில் நித்யா மேனனுடன் நடிக்கும் பாடல் காட்சியின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course