இன்ப அதிர்ச்சியில் சூர்யா ஜோவின் அன்பளிப்பு!!

திரையுலகின் நட்சத்திர ஜோடி என்றால் அது நம் சூர்யா – ஜோதிகா தான். சில சமயங்களில் எடுத்துக்காட்டாக சொல்லக்கூட சூர்யா – ஜோதிகாவை தான் சொல்வார்கள் அந்த அளவிற்கு பிரபலமான ஜோடி. இவர்களுக்கு திருமணமாகி தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமண செய்துகொண்டு கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொண்டு வந்தார். இந்நிலையில், 36 வயதினிலே படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்த முதல் படம். அதன் பிறகு பசங்க 2 கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களை தயாரித்துள்ளனர். நேற்று சூர்யா – ஜோதிகாவின் திருமண நாளுக்காக கணவர் சூர்யாவிற்கு ஜோதிகா அன்பளிப்பு கொடுத்துள்ளார். சூர்யாவின் பென்சில் ஓவியம் மற்றும் சிங்க ஓவியத்தை ஜோதிகாவே வரைந்து திருமண நாள் பரிசாக கணவருக்கு கொடுத்துள்ளார். அந்த ஓவியங்களை ஜோதிகா அவரின் இன்ஸ்டாவில் பதிவிட்டு சிங்கத்திற்கு பரிசு என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் ஜோதிகா இன்ஸ்டாவில் அவரது முதல் விடியோவை பதிவிட்டார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course