கொரோனாவால் தாய், சகோதரியை இழந்து தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை!

கொரோனாவால் 2 வாரங்களுக்கு முன் தாய் மரணம். தற்போது சகோதரியையும் இழந்து தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேதாவின் சகோதரி வத்சலா சிவகுமார் (45) உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் தனது தாயை இழந்தார்.

கொரோனா தொற்றால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேதாவின் சகோதரி நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தாய் சோகத்தின் சுவடு மறைவதற்குள் வேதா கிருஷ்ணமூர்த்தி தனது உடன் பிறந்த சகோதரியையும் இழந்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas