கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் இன்னும் மூன்று நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா மருத்துவ மையம் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடனெரே தலைமையில் நடைபெற்ற கருத்தாய்வு கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் மூன்று நாட்களில் அதாவது வரும் 25ஆம் நாள் இந்த கொரோனா மருத்துவ மையம் தொடங்கப்பட உள்ளது எனவும் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்க படுக்கை வசதி கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







