ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வி!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்ட்டில் மொத்தம் 1551 வாக்குகள் உள்ளன. ஆனால், தேர்தல் அன்று மொத்தம் 913 வாக்குகள் மட்டுமே பதிவானது.

இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது இதில் திமுக கட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக திமுக அதிருப்தி வேட்பாளராக களமிறங்கிய ஜெயராசு என்பவர் 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். அதிமுக கட்சியை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

இதே வார்ட்டில் பாஜக சார்பு வேட்பாளராக கார்த்திக் என்பவர் போட்டியிட்டார். இவர் கோவை மாவட்ட வடக்கு பகுதி பாஜக இளைஞரணி துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில், 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜக சார்பு வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் குருடம்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள 4-வது வார்டு பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு 9-வது வார்டு பகுதியில் ஓட்டு போடுவதற்கான உரிமை இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas