9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக கூட்டணிகள் தொடர்ந்து முன்னிலை!!

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1375 ஒன்றிய கவுன்சிலர், 2779 கிராம ஊராட்சி தலைவர், 19686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 -ம் தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு என்னும் இடங்களை மாநிலத்தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர். 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாலை 7 மணி வரை வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணிகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 88 இடங்களில் தி.மு.க கூட்டணிகள் முன்னிலை வகிக்கிறது. 2 இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 353 இடங்களில் தி.மு.க கூட்டணிகள் முன்னிலை வகிக்கிறது . 59 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course