கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டு 10,11,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது. பொதுத்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
10,11,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்” என்றார்.