உடலில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக மூன்று சிறந்த இயற்கை உணவுகள் இதோ!

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும்.

 

இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்.

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் – அரை கிலோ (விதை நீக்கியது)

சுத்தமான தேன் – அரை கிலோ

குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை :

ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும். இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்

இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள்.

இரத்த சோகை!

இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிப்பு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.

ஆண்மை பெருக!

இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas