கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் மூன்றாவது அலை பரவுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி உள்ளிட்டவைகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணியை இந்தியாவில் அதிகரிக்காவிட்டால் மூன்றாவது அலை பரவுவதை தடுக்க முடியாது என கணித ஆராய்ச்சியாளர் வித்யாசாகர் எச்சரித்துள்ளனர்.
மேலும் முறையான வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஆறு அல்லது எட்டு மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்கும் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக வைரஸ் உருமாறும் போது மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முடியாது எனக் கூறிய முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் அடுத்த அலைக்கு தயாராக இருப்பது அவசியம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







