வயிற்றில் இருக்கும் தசைகள் மகராசனம் ஆசனத்தை செய்யும் போது தசைகள் ஓய்வடைந்து ஜீரண சக்தி அதிகரிக்கிறது. இந்த ஆசனம் மேற்கொள்வதால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். முதலை போன்ற தோற்றம். ‘மகர’ என்றால் முதலை. இந்த ஆசனத்தின் உச்சகட்ட நிலையில் உடல் முதலை போன்ற தோற்றத்தைத் தரும்.

மகராசனம்
செய்முறை :
தரையில் போர்வையை விரித்து குப்புறப்படுத்து தலைக்கு மேல் இரு கைகளையும் நேராக நீட்டவும். உள்ளங்கைகள் தரையின் மீது இருக்கவும். பின்பு முகவாய் தரையை தொட்டுக் கொண்டிருக்க, கால்கள் சேர்ந்து உள்ளங்கால்கள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். தலை முதல் கால் வரை ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமைந்திருக்க வேண்டும்.
இரு குதிகால்களும் ஒன்றையொன்று நோக்கியபடி, கால்களை அகட்டியபடி வைக்கவும் . வெளி நோக்கி கால்கள் இருக்க வேண்டும். வலது கையை மடக்கி இடது தோளின் மீது உள்ளங்கையை வைக்கவும். பின்பு இடது கையை மடக்கி வலது தோளின் மீது உள்ளங்கையை வைக்கவும்.
இரண்டு முன் கைகளும் சேரும் இடத்தின் மீது முகவாயை வைக்கவும். இதே நிலையில் கொஞ்ச நேரம் இருக்கவும். இடது உள்ளங்கையை விலக்கி இடது கையை நீட்டவும். அதே போன்று வலது உள்ளங்கையை விலக்கி வலது கையை நீட்டி பழைய நிலைக்கு கொண்டு வரவும். இந்த பயிற்சியில் 4 நிமிடங்கள் ஈடுபடலாம்.
பலன்கள்:
- உடல் முழுவதும் நல்ல ஓய்வைத் தந்து ஆரோக்கியத்தை தரும். அதிக ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன இறுக்கம் ஆகிய பல பிரச்சனைகளுக்கு நல்ல பயிற்சி இது.
- இந்த ஆசனத்தில் கழுத்து, முதுகெலும்புகள், தசைகள் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.
- வயிற்றில் இருக்கும் தசைகள் ஓய்வு பெற்று ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.
- மலச்சிக்கல் கோளாறு ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
- மூச்சை இழுத்து விடும் போது, மேலும் கீழும் வயிறு அசையும்போது, முதுகுக்கும் இடுப்புக்கும் நல்ல ஓய்வு கிடைக்கப்பெறும்.
- ஆஸ்துமா, மூச்சிரைப்பு பிரச்சனைகளை போக்க , இது மிக நல்ல ஆசனம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







