வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் எதுவென்று தெரியுமா?

நமது வயிறு எனும் இரைப்பையில் உள்ள உட்சுவர்கள் மிகவும் மென்மையானது. இதனில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் போது தான் அல்சர் வருகிறது. ஆகவே அல்சர் வராமல் தடுக்க எந்தெந்த உணவுகளை எப்போது உண்ணவேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 

1) சோடா:

 சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அமிலங்கள் உடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
 

2) தக்காளி :

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில்  அதில் உள்ள அமிலங்கள் இரைப்பையில் சுரக்கும் செரிமானத்தை தூண்டும் அமிலங்கள் உடன் இணைந்து, கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.
 

3) மாத்திரைகள்:

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள  உட்சுவர் படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும். ஆகவே தான் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது வேறு மாத்திரைகள் சேர்த்து தருவார்கள்.
 

4) ஆல்கஹால் எனும் மது அருந்துதல்:

 ஆல்கஹால் பெயரைக் கேட்டாலே அது ஆரோக்கியமற்றது என்று நாம் அறிந்ததே.
அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, உடல்நலம் கெட்டு விடும்.
 

5) காரமான உணவுகள்:

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், அல்சரை வலிய அழைத்து வரும்.
 

6) காபி ,டீ:

காபி மற்றும் டீ மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்காமல் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
 

7)வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.
 

8) சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான ஜீரண அமிலங்களை சுரக்கசெய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course